50 ரூபாயும், 3900 ரூபாயும்

sorna.8474742
உண்மைக் கதைகள்
4.2 out of 5 (5 Ratings)
Share this story

மீனு இன்னைக்கு நான் அம்மா கூட பலசரக்கு ஜாமான் வாங்க போறேன்டி.. என்று அம்மாவோட வெளில போக கெளம்பிட்டு இருந்த தங்கச்சி கிட்ட சொன்ன வள்ளியிடம்.. முடியாது இந்த வாரம் நான் தான் போவேன்.. போன வாரமும் நீ தான கோவிலுக்கு போன.. நான் சின்ன பொண்ணா இருக்குறனால எப்போ பாத்தாலும் என்னை ஏமாத்திட்டே இருக்க... என்று தன்னை கெஞ்சும் அக்காவை நிமிர்ந்து கூட பார்க்காமல் சொன்னால் மீனு...

இந்த வாரம் மட்டும் நான் போறேன்..டி அடுத்த வாரம் நீ போய்ட்டு வா.. உனக்கு வரும் போது தென்னங்குருத்து வாங்கிட்டு வரேன்.. என்று மீனுவிற்கு பிடித்த தின்பண்டத்தை வைத்து மடக்கினாள்.. மீனு யோசித்தாள்.. ஹ்ம்ம்.. அப்போ எனக்கு உன்னோட தீபாவளி டிரஸ்அ.. சனிக்கிழமை தரியா நான் ஸ்கூலுக்கு போட்டுட்டு தரேன்.. சரி தாரேன்.. ஆனா அழுக்கு ஆகம திருப்பி தரணும்.. என்று சொல்லி ஒரு ஒப்பந்தம் போட்டு கொண்டனர்..

வாசலில் நின்று அம்மா அழைத்தார்.. 'மீனு போகலாமா??'.. பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடி வந்தால் வள்ளி... அம்மா போகலாம்மா என்று.. என்னடி மீனு எங்க? அவ தானே வரேன்னு சொன்ன.. உன்ன போன வாரம் கூட்டிட்டு போனேன் ல.. என்றாள் அம்மா.. இருவரும் அம்மாவிற்கு ஒன்று தானே... இல்லம்மா.. அவ அடுத்த வாரம் உன்னோட வரட்டும்.. சின்ன பொண்ணு தானே .. அவளால பைய தூக்க முடியாது..ல.. நான் வந்தா சின்ன பைய தூக்கிட்டு உனக்கு உதவிய இருப்பேன் மா... ப்ளீஸ்...

அம்மாவிற்கு தெரியாத தன் மகளை பற்றி.. வள்ளி போன வாரம் தான் கலர் பென்சில் கேட்ட வாங்கி குடுத்தேன்.. இந்த வாரமும் எதாவது வாங்கித்தர சொல்லி வம்பு பண்ண கூடாது.. எனக்கு ரெண்டு மூணு கடைல பொருள் வாங்கணும்.. அப்புறம் எதையாவது மறந்துட்டா, வீட்டுக்கிட்ட காசு அதிகமா இருக்கும்.. உங்கப்பா "இவளோ செலவு பண்ண பணம் என்ன மரத்துலயா காய்க்குது"னு கோச்சுக்குவாரு என்று புலம்பினாள்.. இல்லம்மா.. எதுவும் வேணாம் சும்மா உன் கூட வரேன்.. என்று அம்மா கிட்ட சம்மதம் வாங்கி இருவரும் புறப்பட்டனர்..

அம்மா ஆட்டோ எல்லாம் பிடிக்க மாட்டாள்.. நடந்து தான் போகணும்.. வேடிக்கை பார்த்துகொன்டே நடந்த வள்ளிக்கு கால் வலிக்க ஆரம்பித்தது.. அம்மா கடையில் ஒவ்வொரு பொருளாக வாங்க தொடங்கினாள்.. என்ன அண்ணாச்சி விலையெல்லாம் எப்படி ?? ஏதும் கொறஞ்சுருக்கா என்று கேட்டு கொண்டே சிறுது பொறி கடலை அள்ளி வள்ளியின் கையில் திணித்தாள்..
எங்கம்மா எறங்குறது பருப்பு சீனி விலை எல்லாம் ஏறிருக்கு.. வியாபாரம் பண்ணறதுக்குள்ள தலையே சுத்துது .. பேசாம பசங்க கூட போய் பட்டணத்துல தங்கிறலாம் என் பொண்டாட்டி வேற படுத்துறா ... என்று அவரும் புலம்பினார்.. இருவரும் தனக்கு சம்மந்தம் இல்லாத எதையோ பேசுவது போல வள்ளி பொறிக்கடலையை தின்றபடி யோசிக்க ஆரம்பித்தாள்.. அம்மாவிடம் எப்படி சொல்லுவது என்று.. இருவரும் பையை தூக்கி கொண்டு மெதுவாக நடந்தனர்.. அம்மா எல்லாம் வாங்கிட்டியா? வீட்டுக்கு போகலாமா? என்றாள் வள்ளி தயங்கியபடி...

ஹ்ம்ம்.. ஆமா.. வீட்டுக்கு தான்.. என்றாள் அம்மா இரு கைகளிலும் கட்ட பையையை தூக்கியபடி, சரியான சமயம் தானா.. கேட்கலாமா.. வாங்கித்தருவாளா.. கோவித்துக்கொள்ளுவாளா.. என்று ஆயிரம் குழப்பத்தோடு.. அம்மா.. கால் வலிக்குது..ல இங்க இருந்து ஆட்டோ..ல போன இருபது ரூபா கேப்பான்.. நம்ம நடந்தே போன 20 ரூபா மிச்சம் தானா.. என்ற வள்ளியின் நோக்கம் அம்மாவிற்கு புரிந்தது.. இருந்தும் அமைதியாக என்ன கூறுகிறாள் என்று பாப்போம் என.. "ஆமா அதுக்கு இப்போ என்ன?" என்றாள். "ஒன்னும் இல்லை.. இங்க ஒரு பழைய புத்தக கடை இருக்கு..ல அதுல கலர் அடிக்குற புக் வாங்கி தரியா? 10 ரூபா குள்ள இருந்தா.. இல்லனா வேணாம்.. கலர் பென்சில் இருக்கு.. படம் போட்ட புக் இருந்தா தானா கலர் அடிக்க முடியும்.. அதான் கேட்டேன்... நானும் மீனுவும் சண்டை போட்டுக்காம கலர் அடிப்போம் மா.." என்ற சொன்ன வள்ளியை பார்க்க பாவமாக இருந்தது.. சரி வா என்று அழைத்து போய் ஒரு புக் வாங்கினார்கள்.. மனநிறைவுடன் வரும் வழியில் தென்பட்டது அந்த தென்னங்குருத்து கடை, கேட்டால் அடி விழும் என்று கண்டும் காணாமல் வந்து விட்டாள்..

இன்னும் 2 தெரு தாண்டி வீடு வரும் நேரத்தில் கண்ணில் பட்டது அந்த ஐம்பது ரூபாய் நோட்டு .. யாரும் சீண்டாமல் அனாமத்தாய் ரோட்டில் கிடந்தது.. அம்மா குனிந்து எடுத்ததை கவனித்த வள்ளி, "யாரோடதுமா?" என்றாள்.. "தெரியல பாவம் யாரோ போட்டுட்டு போய்ட்டாங்க" என்று சுத்தி முத்தி பார்த்தாள்.. "அப்போ கீழ போட்ரு மா.. நம்மளோடது இல்லன்னா எடுக்க கூடாது நீ தானா சொல்லிருக்க!" என்று மகள் சொன்ன வார்த்தை அம்மாவிற்கு சுருக் என்றது.. "சரி தான் வள்ளி... நம்ம யாராவது பிச்சைக்காரங்களுக்கு குடுத்துறலாம்" என்றாள் அம்மா இரக்க குணத்தோடு... "வேணாம் மா, நமக்கு சொந்தம் இல்லாத பொருளை தானமா குடுக்குறதுக்கு நம்ம யாரு..? கீழ போட்ருங்க.. தொலைச்சவரே வந்து எடுத்துக்கலாம்.. இல்லன்னா பிட்சைக்காரங்க கூட எடுத்துக்கட்டும்.. நமக்கு எதுக்கு..மா.. " என்று கூறிய 12 வயது நிரம்பிய வள்ளியை பெருமிதத்தோடு பார்த்த அம்மா.. ரூபாய கீழே போட்டாள்..

இது நடந்து 12 ஆண்டுகள் ஆனா போதும் வள்ளிக்கும் மறக்கவில்லை.. ஏனென்றால் அம்மா பல முறை உதாரணமாக கூறி பெருமை பட்ட கதை..
இந்த 12 ஆண்டுகளில், அவர்கள் வாழ்க்கையில்.. பலசரக்கு வாங்கும் கடை பிக் பஜார் ஆகவும், கலர் பென்சில் கலர் புக் candy crush ஆகவும், தென்னங்குருத்து burger ஆகவும், பேரம் பேசுவது offer product ஆகவும், ஆட்டோ கூட பிடிக்காமல் நடந்தது ola cab ஆகவும் மாறி இருந்தது..

இன்று வள்ளிக்கு இந்த கதை ஞயாபகம் வர காரணம்.. போன வாரம் நடந்த சம்பவம்.. அம்மா போனில்.. தலை தீபாவளிக்கு டிரஸ் எடுத்துட்டு வந்துருங்க மா.. உனக்கும் மாப்பிள்ளைக்கும் நல்ல துணியா எடுத்துக்கோங்க.. நாங்க எடுத்த உனக்கு பிடிக்குதோ என்னமோ.. உங்களுக்கு பிடிச்ச மாதிரி நீங்களே எடுத்துருங்க.. அப்பா ஊருக்கு வரும் போது பணம் குடுத்துருவாங்க... விலையை பத்திலாம் யோசிக்காத.. உனக்கு பிடிச்ச மாதிரி ஒரு 4000 குள்ள எடுத்துக்கோ மா.. என்று அம்மா கூறியது வள்ளிக்கு சந்தோசம் தாங்கமுடியல.. போன வாரம் போத்திஸ்ல.. வாங்குனேன் விலை 4000 டி.. என்று வள்ளியின் தோழி வாட்ஸாப்ப் ல அனுப்பிய டிரஸ் பாத்ததுல இருந்து கண்ணை உருத்திகிட்டயே இருந்தது, வள்ளி என்ன தான் TCS..ல வேலை பார்த்தாலும்.. 600 to 1000 குள்ள தான் டிரஸ் எடுப்பா.. கொஞ்சம் சிக்கனமான பொண்ணு.. சரி இந்த தடவ தலை தீபாவளில மெரட்டிரலாம்..னு அவளுக்கு பிடிச்ச அனார்கலி குர்தி பிங்க் அண்ட் ப்ளூ ல எடுத்தாச்சு.. கடைக்கு கூட்டிட்டு போன வள்ளியின் கணவன் கார்த்திக்கு ஒன்னும் புரியல.. என்ன நம்ம காசு கொஞ்சம் அதிகமா செலவு பண்ண 1000 பேசுவா.. இன்னைக்கு என்னாச்சு.. 4000 டிரஸ் எடுக்குறா...

என்ன வள்ளி 4000 ரூபாய்க்கு டிரஸ் எடுக்குற..? வெளில மழை வருதா என்று கிண்டலாக கூறினான் காதல் கணவன் கார்த்தி.. இல்ல..டா அம்மா தான் சொன்னாங்க 4000 குள்ள எடுத்துக்கோ னு.. அதான்.. இந்த டிரஸ் வாங்கணும் னு ரொம்ப நாலா ஆசை.. அதான் எடுத்தேன்.. இதுல 100 ரூபாய் ஆபர் வேற இருக்கு.. 3900 ருபாய் தான்.. என்றாள் வள்ளி (இப்போ தானா கல்யாணமாயிருக்கு, காதல் கணவன் வேற அதுனால ""டா.."" போடாம பேச இன்னும் வரல.. கார்த்திக்கும் பிடிச்சிருந்தது.. ஆனா தனியா இருக்கும் போது மட்டும், என்ன இருந்தாலும் இப்போ கணவன் போஸ்ட்க்கு வந்தாச்சுல.. மரியாதையை அவ்வப்போது எதிர்பாக்க தான் செய்தான்) அவங்க சும்மா formality சொல்லிருப்பாங்க அதுக்காக 4000 கு டிரஸ் எடுக்குறதெல்லாம் ரொம்ப ஓவர்.. சும்மா 1௦௦௦ ரூபாய்க்கு எடுத்துக்கோ.. நாம பொங்கலுக்கு இந்த டிரஸ் எடுக்கலாம்.. நான் வாங்கி தரேன் என்றான்.. வள்ளி பிடிவாதமாக வாங்கிவிட்டாள்..

இருவரும் கடையில் இருந்து வெளில வரும் போது நல்ல மழை.. கார்த்தி நீ உத்தம புருஷன் தான் டா.. சொன்ன மாதிரியே மழை பெய்யுது பாரேன்..னு கணவனை கிண்டல் செய்த வள்ளியை செல்லமாக முறைத்து விட்டு ola வில் ஏறும் போது.. டிரஸ் கவர் நனைத்து விடாமல் பிடிக்கும் கவனத்தில், போனை தவற விட்டாள் வள்ளிி.. சோனி xperia M வாங்கி 4 வருஷம் ஆச்சு.. எவளோ புது போன் வந்தாலும் வாங்கவில்லை.. கார்த்தி 2 போன் மாற்றி விட்டான், ஆனால் வள்ளிக்கோ அடிக்கடி போன் மாற்றுவதில் விருப்பமில்லை, இன்று தண்ணிக்குள் விழுந்து screen வேற உடைந்தது. ஒரு வாரத்திற்கு பின் கார்த்தி போனை சரி செய்து கொண்டு வந்தான். "ஒன்னும் இல்லை, உள்ள தண்ணி போய்டுச்சாம். screen வேற புதுசு போட்ருக்கான். மொத்தம் 3900 ருபாய் ஆச்சு. புது போனை வாங்கிக்கோ தீபாவளிக்கு அமேசான்ல offer போட்ருக்கான்.னு சொன்னா கேக்குறியா.?? என்ன செண்டிமெண்ட்..ஓ ?? சரி சீக்கிரம் ரெடி ஆகு.. ஊருக்கு கெளம்பனும்" என்று கூறி கார்த்தி குளிக்க சென்றான்.

நாம் சம்பாரித்த பணத்தை செலவு செய்ய தயங்கும் நாம் ஏன் பிறர் பணத்தை அவ்வாறு எண்ணுவதில்லை..?
12 வயதில் அடுத்தவர் பணத்திற்கு ஆசை படக்கூடாது என்று அம்மாவிருக்கு அறிவுரை கூறிய என் அறிவு இப்பொது எங்கே போனது..?
சிறுவயதில் இருந்த நேர்மையையை மழுங்க செய்தது எது?
3900 டிரஸ், 3900 போனை ரிப்பேர் செய்ய, என் மனதில் உள்ள அல்ப தனத்தை விளக்கியது..

போன் அடித்தது.. ஹலோ அம்மா, ஹ்ம்ம்.. train ஏறிட்டோம். ஆமா, lowerberth தான். காலைல 5 மணிக்கு மதுரை வந்துரும். அலாரம் வச்சுட்டோம். bag எல்லாம் பத்திரமா அடுக்கிட்டோம், என்னமா? ட்ரெஸ்ஸா ?? எடுத்துட்டேன் மா. 1000 ரூபாய்..
இல்லம்மா அது தான் பிடிச்சுருந்துச்சு, பரவாயில்லை மா.. நல்லாத்தான் இருக்கும். நீ ஊருக்கு வந்ததும் பாரு. சரி போனை வச்சுறேன். பேசி முடித்த வள்ளியை ஒரு புன்னகையுடன் பார்த்தான் கார்த்தி. இருவர்க்கும் 2900 ருபாய் டிரஸ் 1000 ரூபாய் ஆக மாறியதன் காரணம் புரிந்தது...

நன்றியுடன் போனை தலைமாட்டில் வைத்தபடி உறங்கினாள் வள்ளி..!!!

Stories you will love

X
Please Wait ...